தாக்குதலுக்குள்ளான குருந்துகொல்ல பள்ளிவாசல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

தாக்குதலுக்குள்ளான குருந்துகொல்ல பள்ளிவாசல்


திட்டமிட்ட ரீதியில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளைக் குறிவைத்து மத்திய மாகாணத்தில் ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தையும் மீறி இனவாதிகள் தாக்குதல் நடாத்தி வருகின்ற நிலை தொடர்கின்றது.


அந்த வகையில் சில மணி நேரங்களுக்கு முன்பாக குருந்துகொல்லக்குள் புகுந்த காடையர்கள் அங்கிருக்கும் தைக்கியா பள்ளிவாசல் மீதும சராமரியான கற்களை வீசித் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அக்குரணை பகுதிக்குள் முழுமையாக நுழைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத போதிலும் பல வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்றிரவும் வன்முறைகள் தொடரும் அபாயம் நிலவி வருகிறது.


இந்நிலையில், தற்சமயம் ஜனாதிபதி இராணுவத்தினருடன் கண்டிக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment