ஜனாதிபதியுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் அவசர சந்திப்பு ! - sonakar.com

Post Top Ad

Wednesday 7 March 2018

ஜனாதிபதியுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் அவசர சந்திப்பு !


சட்ட ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பையும் நாட்டின் பிரதமரே வைத்துக் கொண்டும் வரலாறு காணாத இனவன்முறைகள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில்,  ஜனாதிபதி இன்று முஸ்லிம் அமைப்புகளை சந்திக்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

மிக முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதியிடம் நேரடியாக பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கான இவ்வேற்பாட்டினை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணித் தலைவருமான அசாத் சாலி ஏற்பாடு செய்ததாக இன்றைய சந்திப்பில் பங்கேற்கவுள்ள முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

தற்சமயம் கண்டி விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, மாலை கொழும்பு திரும்பவுள்ள அதேவேளை எவ்வகையான தீர்வை அவரால் தர முடியும் என்பதிலும் சந்தேகம் நிலவுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

ஏலவே ஊரடங்குக்கு மேல் ஊரடங்கும் அவசரகால சட்டப் பிரகடனமும் அமுலில் இருந்தும் வன்முறைகள் தொடர்கின்ற நிலையில் இச்சந்திப்பு இன்று மாலை 7 மணியளவில் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment