திகனைக்குப் போனதுடன் காணாமல் போன ரிசாத்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

திகனைக்குப் போனதுடன் காணாமல் போன ரிசாத்!இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்களைப் பாரிய அளவில் ஆக்கிரமித்து நாளுக்கு பத்து செய்தி மூலம் வலம் வந்து கொண்டிருந்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் கடந்த 5ம் திகதி திகனைக்குச் சென்றபின் மயான அமைதி நிலையில் வீற்றிருப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

திகன சென்ற காணொளியை வைத்து மறு நாள் வரையிலும் பரப்புரையில் ஈடுபட்டிருந்த நிலையில் முஸ்லிம்களுக்கு தேசிய தலைவராகவும் மாற்றுத் தலைவராகவும் செயற்பட விரும்பிய ரிசாத் பதியுதீன் நாடாளுமன்றில் தரப்பட்ட சந்தர்ப்பத்தில் பேசினாலும் அதன் பின் மத்திய மாகாணத்தில் இடம்பெற்றுள்ள எந்த அனர்த்தத்தையும் நேரடியாகச் சென்று பார்வையிடவோ பேசவோ முடியாத நிலையில் முடங்கிக் கிடக்கிறார்.

ரவுப் ஹக்கீம் தனக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை உபயோகித்து நேற்றிரவும் சில இடங்களுக்கு விஜயம் செய்துள்ள போதிலும் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகல் வேளையில் எங்கும் செல்ல முடியாத நிலையில் முடங்கிக் கிடக்கின்றனர். தனி முஸ்லிம் அரசியல் கோசத்தின் மூலம் மத்திய மாகாணத்தில் கடந்த தேர்தலில் வாக்குப் பிரிப்பில் ஈடுபட்ட கட்சிகள் மாத்திரமன்றி எதிர்க்கட்சியிலிருந்த போது கோசம் போட்ட ஆளுங்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களும் வாய்மூடியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமூகம் தற்காப்பையும் நெறிப்படுத்த முடியாது தவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-RJ Riyal

1 comment:

Sano said...

he is at home and watching a terror latest released kandy movie and when he get boring he will come out to some tour in kandy area.

Post a Comment