திகன முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டேன்: ரவுப் ஹக்கீம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

திகன முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்து விட்டேன்: ரவுப் ஹக்கீம்!


நேற்றிரவு முதல் வன்முறையால் பாதிக்கப்பட்டு போதிய இழப்புகளை சந்தித்துள்ள திகன பகுதிக்கு இன்று விஜயம் செய்து பாதுகாப்பு தரப்பினரால் அனுமதிக்கப்பட்ட சிறு பகுதியினரை சந்தித்துள்ள ரவுப் ஹக்கீம், தனது பயணத்தின் பின் திகன முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளார்.


அம்பாறை விடயத்தோடு காணாமல் போன ரிசாத் பதியுதீன் இன்னும் கண்டி சென்று சேரவோ இவ்விடயம் தொடர்பில் பேசவோ முடியாத நிலையில் முடங்கிக் கிடக்கின்ற நிலையில், இரவில் அங்கு வருவதற்கு அனுமதியளிக்கப்பட்ட ரவுப் ஹக்கீம் சந்தி சந்தியாக பொலிசாரை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்.


இதன் பின்னணியில் அனைத்து வன்முறைகளும் அடங்கி விட்டது எனவும் ஹக்கீம் பூரிப்புடன் கருத்து வெளியிட்டுள்ள அதேவேளை கட்டுகஸ்தொட்ட பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment