யாழ்: இன வன்முறையைக் கண்டித்து கவனயீர்ப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

யாழ்: இன வன்முறையைக் கண்டித்து கவனயீர்ப்புமுஸ்லிம் மக்கள் மீதான பேரினவாத தாக்குத்தல்களை கண்டித்தி யாழ் பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பபு போராட்டமொன்று இன்று (13)காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் சிறுபான்மை இனங்களை நின்மதியாக வாழவிடு , தமிழ் ,சிங்கள,முஸ்லீம் உறவை வலுப்படுத்துங்கள் , இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் இப்படியான பல பதாதைகளை தாங்கிய வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அம்பாறையில் ஆரம்பித்து கண்டி மாவட்டத்தின் பல முஸ்லிம் கிராமங்களுக்கு பரவியிருந்த வன்முறைச் சம்பவங்களால் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் சேதப்பட்டதோடு 300 குடும்பங்கள் இடம்பெயரவும் நிர்ப்பந்திக்கப்பட்டமை நினைவூட்டத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment