சமய வழிபாட்டுத்தளங்களை அமைப்பதற்கு புதிய சட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

சமய வழிபாட்டுத்தளங்களை அமைப்பதற்கு புதிய சட்டம்அரசியல்வாதிகளுக்கோ சமயத் தலைவர்களுக்கோ நினைத்தபடி சமய ஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கு என தற்போதுள்ள சட்டம்  இலகுவானதாக அமைந்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் உரிய சட்ட திட்டங்களுடன் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமின ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர்  இது பற்றி அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்:

இந்நாட்களில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இனி வரும் காலங்களில்  சமய ஸ்தலங்கள் ஒவ்வொன்றும்  அதற்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளன.  


தூரம் மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள மக்கள் தொகையும் கவனத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால்  அலி


No comments:

Post a Comment