சவுதி: இலங்கைப் பணிப்பெண் சுட்டுக் கொலை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

சவுதி: இலங்கைப் பணிப்பெண் சுட்டுக் கொலை!


சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாகவிருந்த இலங்கைப் பெண் ஒருவர் (42) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சவுதி கசட் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த பெண் தங்கியிருந்து வீட்டிலேயே கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மன நலன் பாதிக்கப்பட்ட சவுதி பிரஜையே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதுடன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


புரைதாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பிரியங்கா ஜயசேகர என தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment