நல்லாட்சி தோற்றுவிட்டது என்கிறார் 'விழித்துக்கொண்ட' இம்ரான் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

நல்லாட்சி தோற்றுவிட்டது என்கிறார் 'விழித்துக்கொண்ட' இம்ரான்இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்போம் என ஆட்சிபீடம் ஏறிய இந்த நல்லாட்சி தோல்வியடைந்துள்ளது. முதலில் காலியில் தோல்வியடைந்தோம். அதன்பின் அம்பாறையில் நேற்று கண்டியில் நாளை நாடு முழுவதும் இந்த இனவாத தீ பரவும் என தெரிவிக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான்.

அவர் சார்ந்த கிழக்கு மாகாணத்தின் அம்பாறை பிரச்சினை நடந்து முடிந்து, திகன மற்றும் சுற்றுச்சூழலில் இனவன்முறை நடைபெற்று முஸ்லிம்கள் பெருமளவு சேதத்தை சந்தித்துள்ள நிலையில் இப்போது தலை காட்டியுள்ள இம்ரான் நல்லாட்சி தோற்றுவிட்டதாக தெரிவிக்கிறார்.


எனினும், சட்ட ஒழுங்கு அமைச்சு அவரது கட்சியின் தலைவரின் பொறுப்பிலேயே உள்ள நிலையிலேயே அரசாங்கம் மௌனியாக கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment