திகன: 2 வாகனங்கள் உட்பட 11 பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

திகன: 2 வாகனங்கள் உட்பட 11 பேர் கைது!


File photo

திகன பிரதேசத்தில் நேற்றிரவு பதற்றத்தை உருவாக்க முனைந்த குற்றச்சாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இரு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லையென மேலதிக விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள இளைஞன் ஒரு வார காலத்தின் பின் உயிரிழந்திருந்த நிலையில் திகனயில் இன ரீதியான பதற்றம் தோன்றியிருந்தது.

இதன் பின்னணியில், முஸ்லிம் நபர்களுக்குச் சொந்தமான இரு வர்த்தக நிலையங்கள் தீப்பற்றியிருந்ததுடன் வாகனம் ஒன்றின் மீதும் கல்வீச்சு இடம்பெற்றிருந்தது. எனினும் சம்பவ இடத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்ததாக அதிகாலையில் பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தககது.

No comments:

Post a Comment