கட்டுகஸ்தொட்ட பள்ளிவாசல் மீது தாக்குதல்; ரிசாத் 'ஆலோசனையாம்'! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

கட்டுகஸ்தொட்ட பள்ளிவாசல் மீது தாக்குதல்; ரிசாத் 'ஆலோசனையாம்'!அம்பாறை விவகாரத்தில் காணாமல் போயிருந்த ரிசாத் பதியுதீன் பாதுகாப்பு உயர் மட்ட குழு கூடும் என காத்திருந்து ஏமாந்து தற்போது பாதுகாப்பு பிரவினால் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டுகஸ்தொட்டயில் தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசலை சென்று பார்த்து நிர்வாகத்திடம் 'ஆலோசனை' நடாத்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார்.


ரவுப் ஹக்கீம் திகனயில் வைத்து சந்திக்கு சந்தி பொலிசை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்து விட்டதாகக் கூறியிருந்த நிலையில் கட்டுகஸ்தொட்டயில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வேறு பள்ளியென நினைத்து மாறிச் சென்றதனால் 'தாமதமாகவே' தாக்குதலுக்குள்ளான பள்ளியை வந்தடைந்ததாகவும் ரிசாத் தரப்பு தெரிவிக்கிறது.இதேவேளை, நேற்று விசேட அதிரடிப்படையினரை அனுப்பி வைத்துள்ளதாக கூறி விட்டு காணாமல் போயுள்ள முஜிபுர் ரஹ்மானும் எஸ். எம். மரிக்காரும் வாய் திறக்க முடியாது அமைதியாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment