சமாதானத்தைப் பேணுங்கள்: மஹிந்த அறிவுரை! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

சமாதானத்தைப் பேணுங்கள்: மஹிந்த அறிவுரை!திகன பகுதியில் ஆரம்பித்த வன்முறை கற்பனைக்கப்பால் பாரிய சேதங்களை உருவாக்கியுள்ள நிலையில் நாட்டின் சமாதானத்தைக் காப்பது அனைவரதும் பொறுப்பெனவும் சமாதானத்தைப் பேண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் களமமைத்துக் கொடுக்கப்பட்ட முஸ்லிம் விரோத கொள்கைகள் இன்று விஸ்வரூபமெடுத்து நிற்பதுடன் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் விளைவில் கிந்தொட்ட, அம்பாறை, திகன என முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்வதுடன் உடமைகள், வர்த்தக நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டு எரியூட்டப்பட்டும் வருகின்றன. ஆகக்குறைந்தது நான்கு பள்ளிவாசல்களும் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமாதானத்தைப் பேணும்படி மஹிந்த அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment