ரணிலின் அமைச்சு முன்னால் நியாயம் கோரி போராட்டம் - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

ரணிலின் அமைச்சு முன்னால் நியாயம் கோரி போராட்டம்


திகனயில் ஆரம்பித்து மத்திய மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு வன்முறை பரவி வரும் நிலையில் சட்ட,ஒழுங்கை நிலை நாட்டும்படி கோரி ரணிலின் அமைச்சு முன்னாள் தற்போது முஸ்லிம்கள் ஒன்று கூடி வருகின்றனர்.


கொல்லுப்பிட்டி பள்ளிவாசலில் இது தொடர்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் ஏற்பாடாகியுள்ள நிலையில் சமூக ஆர்வலர்கள் அப்பிரதேசத்துக்க வந்து சேர்ந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


24 மணி நேரம் கடந்துள்ள நிலையில் தொடர்ந்தும் மத்திய மாகாணத்தின் பல இடங்களில் அச்ச சூழ்நிலை நிலவி வருகின்றமையும் ஆகக்குறைந்தது நான்கு பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டும் எரியூட்டப்பட்டுடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment