இனவாதிகள் பற்றி முறையிட பொலிசாரின் விசேட தொலைபேசி இலக்கம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

இனவாதிகள் பற்றி முறையிட பொலிசாரின் விசேட தொலைபேசி இலக்கம்மத்திய மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் இனவிரோத வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இனவாதிகள், தாக்குதல்களை நடாத்தும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க புதிய 24 மணி நேர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர் பொலிசார்.

தாம் அறிந்த நபர்கள் பற்றிய தகவல்களை 0711261261 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


வட்ஸ்அப், முகப்புத்தகம் போன்றவற்றின் ஊடாக இடம்பெறும் பல்வேறு சம்பாசனைகளின் பிரதிகள் பரவலாக காணப்படுகின்ற அதேவேளை அவற்றில் குறித்த நபர்களது தொலைபேசி இலக்கங்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment