
கொழும்பு, புதுக்கடை பகுதியில் துண்டிக்கப்பட்ட மனித தலைப்பகுதியொன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பை ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ள குறித்த தலைப்பகுதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் இதுவரை அடையாளங் காணப்படவில்லையெனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் புதுக்கடையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடாத்தப்பட்டிருந்தமையும் அதன் பின்னணியில் துப்பாக்கிச் சூட்டை நடாத்திய நபர் பொதுமக்களால் பிடித்துத் தாக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment