முருத்தலாவ: இனவாதிகளுக்கு எதிராக களமிறங்கிய பௌத்த துறவிகள் - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

முருத்தலாவ: இனவாதிகளுக்கு எதிராக களமிறங்கிய பௌத்த துறவிகள்


முருத்தலாவயில் சிறு சிறு அசம்பாவிதங்களும் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்த விட மாட்டோம் என அங்கு பௌத்த துறவிகள் சிலர் முன் வந்து களத்தில் நிற்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கொடந்தன பள்ளிவாசலை நோக்கி பெற்றோல் குண்டு வீசப்பட்ட போதிலும் அதனை உடனடியாக அணைக்க முடிந்ததாகவும் பின்னர் பேக்கரியொன்றுக்கு வீசப்பட்ட பெற்றோல் குண்டை அணைப்பதில் பௌத்த துறவிகளும் இணைந்து பணியாற்றியுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினருடன் மேலும் சில பிரதேசவாசிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முருத்தலாவ பள்ளிவாசலை இனவாதிகள் இலக்கு வைத்திருப்பதாக இரு நாட்களாக பிரதேசத்தில் தகவல் பரவியிருந்த நிலையில் அங்குள்ள விகாரையைச் சேர்ந்த பௌத்த துறவிகளை இவ்வாறு இனவாதிகளுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment