தொடரும் வன்முறை; அம்பத்தென்னயில் காடையர்கள் அட்டகாசம்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

தொடரும் வன்முறை; அம்பத்தென்னயில் காடையர்கள் அட்டகாசம்!


ஊரடங்கு, அதிரடிப்படை பிரசன்னம், கடற்படை பொறுப்பேற்பு, அவசர கால சட்டம் பிரகடனம் என கொழும்பிலிருந்து அரசாங்கம் விதம் விதமான கதைகளை அவிழ்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய மாகாணத்தில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், உடமைகளை சேதப்படுத்தும் காடையர்களின் செயற்பாடுகள் தொடர்கிறது.


இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது அச்ச சூழ்நிலை பரவி வருகின்ற அதேவேளை இன்று காலை அம்பத்தென்னயில் தொழிற்சாலை ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.


இதன் பின்னணியில் பிரதேசத்தின் ஏனைய முஸ்லிம் கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் அச்ச சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment