அரசாங்கத்தை நினைத்து 'வெட்கம்': மரிக்கார்! - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

அரசாங்கத்தை நினைத்து 'வெட்கம்': மரிக்கார்!




எந்தவொரு விடயத்திற்கும் தீர்வு வழங்காமல் இழுத்தடித்து அதன் எதிர் விளைவுகளை மோசமாக்கும் அரசின் முதுகெலும்பில்லாத செயற்பாடுகளை நினைத்து தான் வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்.

இன விரோத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் இவ்வாறே அரசின் அசமந்தப் போக்கு இருப்பதாகவும் இதனை நினைத்து கவலைப்படுவதை விட தான் வெட்கப்படுவதாகவும் இன்று நாடாளுமன்றில் தனதுரையின் போது மரிக்கார் தெரிவித்துள்ளார்.


சிறு கூட்டம் தமது சொந்தத் தேவைகளுக்காக இனவாதத்தைக் கையிலெடுத்து நாட்டை எரியூட்டும் நிலையில் அரசு பார்த்துக் கொண்டிருப்பதை தமது ஆயுள் காலத்தில் பார்க்க நேர்ந்தது அவமானம் எனவும் பஸ் போனதன் பின் கையைக் காட்டுவதில் பயனில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment