இலங்கையர் மத்திய கிழக்கில் புறக்கணிக்கப்படும் அபாயம்: கரு - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

இலங்கையர் மத்திய கிழக்கில் புறக்கணிக்கப்படும் அபாயம்: கரு


முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வின் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையருக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதை குறைத்துக் கொள்ளும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளார் கரு ஜயசூரிய.

அம்பாறையில் ஆரம்பித்து கண்டி மாவட்டத்தில் பல இடங்களில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள், வீடுகள் மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.


கண்டியில் தற்சமயம் சற்று ஓய்ந்துள்ள போதிலும், அச்ச சூழ்நிலை தொடர்கின்ற நிலையில் மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து எதிர் விளைவுகள் எதிர்பார்க்கப்படுவதாக கரு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment