பலசேனாக்களும் பலகாயக்களும் நாட்டுக்கு அவசியமில்லை: மகாநாயக்கர் - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

பலசேனாக்களும் பலகாயக்களும் நாட்டுக்கு அவசியமில்லை: மகாநாயக்கர்


நாட்டைக் காப்பாற்ற பொலிஸ், இராணுவம் உட்பட முப்படையினரும் இருக்கும் போது இடையால் பலசேனாக்களும், பலகாயக்களும் அவசியமில்லையென தெரிவித்துள்ளார் மல்வத்து பீட மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர்.

இவ்வாறான அமைப்புகள் பகிரங்கமாகவே அலுவலகங்களைத் திறந்து வைத்து இன வெறியைத் தூண்டி வருவது தொடர்பில் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள அவர், கிராம மட்டத்திலிருந்து அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


கருப்பு ஜுலை மற்றும் 30 வருட கால யுத்தத்தால் நாடு போதிய அளவு அழிவை சந்தித்துள்ள நிலையில் இச்சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டியது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Nazeer China Ibrahim said...

Salute for u always... you are with true

Post a Comment