ஆறு மாதங்களில் அல்-குர்ஆனை மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டு - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

ஆறு மாதங்களில் அல்-குர்ஆனை மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டுவாழைச்சேனை – தியாவட்டவான் கொழும்பு வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் குறுகியகாலத்தில் (ஆறரை மாதம்) குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவன் முகம்மது ஷபீக் முகம்மது சியாமுக்கு கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி மற்றும் கல்லூரியின் நிருவாகத்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


கடந்த காலங்களில் குறித்த கல்லூரியிலிருந்து பல மாணவர்கள் பல்வேறுபட்ட சாதனைகளை நிலைநாட்டி இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவன் ஆர்வத்துடன் குறுகிய காலத்தில் அல்-குர்அனை மனனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment