அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்!


நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள  அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.


இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள் இஸ்தம்பிதம் அடைந்தும் காணப்படுகின்றன.  கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில் அரசியலாக்கப்பட்டு விட்டதாகவும் பொறுமையாகக் கையாளப் போவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பைஷல் இஸ்மாயில்  

No comments:

Post a Comment