அடிக்க விட்டிருக்கும் அரசிடம் ஆயுதம் கேட்கிறார் ஹிஸ்புல்லா! - sonakar.com

Post Top Ad

Wednesday 7 March 2018

அடிக்க விட்டிருக்கும் அரசிடம் ஆயுதம் கேட்கிறார் ஹிஸ்புல்லா!



ஊரடங்குச் சட்டம், அவசர காலச் சட்டம், ஆயிரக்கணக்கில் படையினர், மின் தொடர்பு சாதனங்கள் முடக்கம் என பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி இனவெறியர்கள் சுதந்திரமாக தாக்கி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த முடியாதிருக்கும் அரசாங்கம் ஆயுதம் தர வேண்டும் என அறிக்கை விட்டிருக்கிறார் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா.


ஆயுதம் கேட்கும் ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாங்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக கண்டிக்கு சென்றுள்ளார். அங்கு விசேட கலந்துரையாடலொனறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடற்படை தளபதி தலைமையில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 
சிறிய விடயமொன்று இந்தளவு தூரம் பெரிதாகும் வரை அரசாங்கம் வேடிக்கை பார்த்தமையிட்டு நாங்கள் கடுமையாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம். 

அதேவேளை, யுத்த கால சூழ்நிலைகளின் போது முஸ்லிம்களின் தற்பாதுகாப்பு கருதி அரசினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டது. அதுபோன்று, தற்போதும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும். நிலைமையினை பாதுகாப்பு தரப்பால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் முஸ்லிம்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment