ரணில் கண்டி வருகிறாராம்: சொல்வது ஹலீம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

ரணில் கண்டி வருகிறாராம்: சொல்வது ஹலீம்!


திகனயில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கட்டுப்பாட்டை மீறி பல இடங்களுக்குப் பரவியுள்ளதுடன் முஸ்லிம்கள் தற்காப்புக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட,ஒழுங்கு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கண்டி வரப்போவதாக தெரிவிக்கிறார் முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம்.

தனது வேண்டுகோளை ஏற்று அவர் அங்கு வருவதாக அமைச்சர் ஹலீம் தெரிவிக்கிறார். இதேவேளை நேற்று முதல் காணாமல் போயிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தாங்களும் ஸ்தலத்துக்கு விரைவதாக தெரிவிக் ஆரம்பித்துள்ளனர்.


இதன் பின்னர், வழமை போன்று அவரவர் உரிமை கொண்டாடும் படலம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை திகனயை சூழவுள்ள பிரதேசங்களில் முஸ்லிம்கள் தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Unknown said...

வருவான்வல் வீர வசனம் பேசுவான்வல் போவான்வல்

Post a Comment