மெல்ல மெல்லத் தலை காட்டும் அரசியல் தலைமைகள்; மாறும் களம்? - sonakar.com

Post Top Ad

Wednesday, 7 March 2018

மெல்ல மெல்லத் தலை காட்டும் அரசியல் தலைமைகள்; மாறும் களம்?மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை சுதந்திரமாக இனவாதிகள் அரங்கேற்றி வந்த நிலையில் இன்றிரவு முதல் அரசின் முக்கியஸ்தர்கள் மெல்ல மெல்ல தமது பிரதேசங்களில் தலை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இன்றைய தினம் ஜனாதிபதி கண்டி சென்று வந்துள்ள நிலையில் தற்சமயம் சில கைது நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் அறியமுடிகிறது.

முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இன்று ஹெலிகப்டரில் அழைத்துச் சென்றுள்ள நிலையில் ஆளுங்கட்சியினர் தற்போது தமது தொகுதி மக்களுடன் பேச ஆரம்பித்துள்ளனர்.இந்நிலையில், இச்சம்பவங்களின் பின்னணியில் 'அரசியல்' இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க முன்னர் தெரிவித்திருந்தமையும் விரைவில் அரசியல் 'விளக்கம்' ஒன்றை எதிர்பார்க்க முடியும் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment