கிளிநொச்சியில் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 8 March 2018

கிளிநொச்சியில் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு


மத்திய மாகாணத்தில் ஆரம்பித்த இனவன்முறையால் உந்தப்பட்டு பல்வேறு இடங்களில் முஸ்லிம் விரோத நிலைப்பாடு உருவாகியுள்ள நிலையில் கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கிழக்கிலும் சிறு அசம்பாவிதங்கள் மற்றும் திட்டமிட்ட, குண்டு வைப்பும் மீட்பும் போன்ற சலசலப்பு இடம்பெற்றிருந்த நிலையில் அதிகாலையில் வவுனியா பள்ளிவாசல் அருகில் டயர் எரிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கிளிநொச்சி மக்கள் வேண்டுதலுக்காக இவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment