இனவாத வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 March 2018

இனவாத வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிப்புஇலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் பற்றி ஜெனிவாவில் தான் எடுத்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்.

அம்பாறை வன்முறைகள் பற்றிய அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்ததாகவும் கண்டி தெல்தெனிய திகன பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களும் சிறுபான்மை மனித உரிமை பணிமனைக்கும் ஏனைய  இராஜ தந்திரிகளும் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதன் போது திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment