அலதெனிய பள்ளிவாசல் ஜன்னல் சேதம்: ரவுப் ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

அலதெனிய பள்ளிவாசல் ஜன்னல் சேதம்: ரவுப் ஹக்கீம்அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசல் ஜன்னலகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைத் தான் பார்வையிடச் சென்றதாகவும் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி, தென்னகும்புர பகுதியில்  பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவலையடுத்து, அங்கும்  நேரில் சென்று பார்வையிட்டதாகவும் குறித்த பள்ளிவாசலுக்கு பெற்றோல் போத்தல் ஒன்று வீசப்பட்டுள்ள போதிலும் இதனால் பள்ளிவாசலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லையெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் ஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கு கலகக்காரர்கள் பெற்றோல் குண்டு வீசியுள்ள நிலையில் வர்த்தக நிலையத்தின் மேல் பகுதி தீப்பிடித்திருந்ததாகவம் அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment