ரணிலும் ஹக்கீமும் சேர்ந்து ஏமாற்றுகிறார்கள்: முபாறக் அ. மஜீத் - sonakar.com

Post Top Ad

Sunday, 4 March 2018

ரணிலும் ஹக்கீமும் சேர்ந்து ஏமாற்றுகிறார்கள்: முபாறக் அ. மஜீத்


நாட்டு முஸ்லிம்க‌ளை அச்சுறுத்திய‌ அம்பாரை முஸ்லிம்க‌ள் ம‌ற்றும் ப‌ள்ளிவாய‌ல் மீதான‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ளின் தாக்குத‌ல் ந‌டை பெற்றிருக்கும் சூழ்நிலையில் அது ப‌ற்றி கொஞ்ச‌மும் க‌ருத்திற்கொள்ளாம‌ல் ஒலுவிலுக்கு வ‌ந்து விட்டு பிரத‌ம‌ர் கொழும்புக்கு திரும்பிய‌மை ஹ‌க்கீமும் பிர‌த‌ம‌ரும் சேர்ந்து முஸ்லிம்க‌ளை ஏமாற்றும் செய‌லில் ஈடுப‌ட்ட‌ன‌ரா என‌   உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன‌வாதிக‌ளின் தாக்குத‌லுக்குள்ளான‌ அம்பாறைக்கு நாட்டின் பிர‌த‌ம‌ர் வ‌ந்துதான் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்ப‌தில்லை. பிர‌த‌ம‌ர் த‌ன‌து அலுவ‌ல‌க‌த்தில் இருந்துகொண்டே ஒரு தொலை பேசி தொட‌ர்பில் காடைய‌ர்க‌ளை அட‌க்கியிருக்க‌ முடியும். அப்போது அது முடியாம‌ல் போயிருந்தாலும் பின்ன‌ர் ப‌ள்ளியை உடைத்த‌வ‌ர்க‌ளை கைது செய்ய‌ வைத்திருக்க‌ முடியும்.

இது எதுவும் ந‌டைபெறாத‌ நிலையில் பிர‌த‌ம‌ரை அம்பாறைக்கு அழைத்து வ‌ந்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்போவ‌தாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌ர‌ப்பே கூறியிருந்த‌து.

அத‌ன்ப‌டி பிர‌த‌ம‌ர் அம்பாறைக்கு வ‌ருவ‌த‌ன் மூல‌ம் சேத‌ங்க‌ளை நேர‌டியாக‌ க‌ண்டு அவ‌ற்றுக்கு உடன‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுப்பார் என‌ அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் ஆவ‌லோடு எதிர்பார்த்த‌ன‌ர்.  ஆனால் முஸ்லிம் காங்கிர‌சும் ஹ‌க்கீமும் திட்ட‌மிட்டு முஸ்லிம்க‌ளை பே காட்டியுள்ள‌ன‌ர் என்ப‌து வெளிச்ச‌த்துக்கு வ‌ந்துள்ள‌து.


  ஒலுவிலுக்கு வ‌ந்த பிர‌த‌ம‌ர் அம்பாறை ப‌ள்ளிவாய‌லை ஏறெடுத்தும் பாராம‌ல் திரும்பிச்சென்றுள்ளார். இத‌ன் மூல‌ம் அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ள், ஹ‌க்கீம், பிர‌த‌ம‌ர் த‌ர‌ப்பால் ந‌ன்கு திட்ட‌மிட்டு ஏமாற்ற‌ப்ப‌ட்டு ச‌மாளிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர் என்ப‌து தெளிவாகியுள்ள‌து. 

-MAM

No comments:

Post a Comment