சாய்ந்தமருது அஷ்ரப் எழுதிய உறங்காத உண்மைகள் நூல் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Sunday, 4 March 2018

சாய்ந்தமருது அஷ்ரப் எழுதிய உறங்காத உண்மைகள் நூல் வெளியீடு

பல்துறை எழுத்தாளரும் கலாசார உத்தியோகத்தருமான  சாய்ந்தமருது எம்.ஐ.எம்.அஷ்ரப் (JP) எழுதிய உறங்காத உண்மைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 2018-03-04 ஆம் திகதி சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டேல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ஆகியோரும் விஷேட அதிதியாக மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீடும் சிறப்பு அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வைத்திய கலாநிதி நாகூர் ஆரீப் ஆகியோரும் இலக்கிய அதிதிகளாக எழுத்தாளர் உமா வரதராஜன், கவிஞர் சோலைக்கிளி, ஆசுகவி அன்புடீன்,பாஏந்தல் பாலமுனை பாறூக் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வரவேற்புரையை நாகூர் நஹீம் நிகழ்த்தினார். நூல் பற்றிய அறிமுகத்தை சாட்சியம் மாத இதழின் பிரதம ஆசிரியர் நவாஸ் சௌபியும்  நூல் பற்றிய நயவுரையை பல்துறை எழுத்தாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் விமர்சகர் ஜெஸ்மி எம்.மூசாவும் ஏற்புரைய நூலாசிரியர்  எம்.ஐ.எம்.அஷ்ரப் (JP) யும் நிகழ்த்தினர்.

நூலின் முதன்மைப்பிரதியை தொழிலதிபர் ஏ.எம்.எம்.தஸ்லீம் பெற்றுக்கொண்டார்.
-எம்.வை.அமீர் யூ.கே.காலிதீன்

No comments:

Post a Comment