கண்டி - எல்ல இடையே புதிய 'சொகுசு' ரயில் சேவை ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Sunday, 4 March 2018

கண்டி - எல்ல இடையே புதிய 'சொகுசு' ரயில் சேவை ஆரம்பம்


கண்டி - எல்ல நகர்களுக்கிடையேயான புதிய சொகுசு ரயில் சேவையொன்றை இன்று முதல் அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ரயில்வே திணைக்களம்.

குளிரூட்டப்பட்ட குறித்த ரயில் சேவை கண்டியிலிருந்து காலை 7.40க்குப் புறப்பட்டு பி.ப 1.30 அளவில் எல்லயை அடையும் எனவும் பின் அங்கிருந்து 2.45க்குப் புறப்பட்டு இரவு 8.05 அளவில் கண்டியை சென்றடையும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இச்சேவைக்கான கட்டணம் ரூ. 1250 என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment