'மாவட்டத்துக்கு' வந்தார்: ரவுப் ஹக்கீம் பூரிப்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 March 2018

'மாவட்டத்துக்கு' வந்தார்: ரவுப் ஹக்கீம் பூரிப்பு!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி, தமது கோட்டையென தெரிவித்து வரும் அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்து எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் பிரதியமைச்சர் ஹரீசும் கடும்போக்குவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், ரணிலையாவது அம்பாறைக்கு அழைத்துச் சென்று தமது பலத்தை நிரூபிக்க முனைந்த முயற்சியும் தோல்வியுற்ற நிலையில் சம்பவம் நடந்த அம்பாறை மாவட்டத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து வந்ள்ளமை குறித்து தனது பூரிப்பை வெளியிட்டுள்ளார்.


அம்பாறை நகருக்குச் செல்வதைத் தவிர்த்த ரணில் ஒருவிலில் சிறு சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். எனினும், அதுவே தமது சாதனையாக தெரிவித்துள்ள ரவுப் ஹக்கீம், பிரதமர் நடவடிக்கையெடுப்பார் எனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, கிழக்குக்கு வரும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாம் எழுதிக் கொடுப்பதையே வாசிப்பதாகவும் தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment