தந்துற வர்த்தக நிலையம் ஒன்றை எரியூட்ட முயற்சி! - sonakar.com

Post Top Ad

Sunday, 11 March 2018

தந்துற வர்த்தக நிலையம் ஒன்றை எரியூட்ட முயற்சி!தந்துற பகுதியில் இயங்கி வரும் முஸ்லிம் நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றை எரியூட்டுவதற்கான முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கடையின் முற்பகுதியில் சிறியளவு சேதம் மாத்திரமே எற்பட்டுள்ளதாகவும் உடனடியாக சிரேஷ்ட டி.ஐ.ஜி விக்ரமசிங்கவைத் தொடர்பு கொண்டு பேசியதன் பயனாக அங்கு பொலிசார் விரைந்ததாகவும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.தமது வர்த்தக நிலையத்துக்கு பாரிய சேதம் எதுவும் இல்லையென உரிமையாளர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.-Rifky A.

No comments:

Post a Comment