சீன ஜனாதிபதிக்கு ஆயுள் முழுவதும் பதவி வகிக்க வாய்ப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 12 March 2018

சீன ஜனாதிபதிக்கு ஆயுள் முழுவதும் பதவி வகிக்க வாய்ப்பு


இரு தடவைகளே ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் எனும் சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சீன ஜனாதிபதி ஷி ஜின் பின் ஆயுட்காலம் முழுவதும் தலைவராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இன்று கூடிய தேசிய மக்கள் காங்கிரஸ் இதற்கு ஆதரவளித்து வாக்களித்துள்ள நிலையில் 2023க்குப் பின்னரும் தொடர்ந்தும் அவரே ஜனாதிபதி பதவியில் நிலைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஷி ஜின் பின் தலைமையில் சீனாவும் விலட்மிர் புட்டின் தலைமையில் ரஷ்யாவும் மேற்குலக நாடுகளுக்கு சவாலாக வளர்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment