திகன விவகாரம்: நிலைமை முழுக் கட்டுப்பாட்டில்: பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 March 2018

திகன விவகாரம்: நிலைமை முழுக் கட்டுப்பாட்டில்: பொலிஸ்!


திகன பகுதியில் நிலவிய பதற்ற நிலையையடுத்து அங்கு துரிதமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதன் பின்னணியில் நிலைமை முழுக் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


விசேட அதிரடிப்படையினரும் பொலிசாருடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் மெதமஹநுவர பகுதியில் இடம்பெற்ற வன்முறையைத் தவிர வேறு எந்த பாரிய சம்பவங்களும் இடம்பெறவில்லையென தெரிவிக்கப்படுகிறது.


சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் இது விடயமாக கவனம் செலுத்துகின்ற அதேவேளை நாளைய தினம் இறந்தவரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ள நிலையில் பிரதேசத்தில் முழு நாளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment