திகன: வாகனங்களின் பிரயாணப் பாதைகள் மாற்றம்; கண்காணிப்பு திவிரம்! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

திகன: வாகனங்களின் பிரயாணப் பாதைகள் மாற்றம்; கண்காணிப்பு திவிரம்!


திகன பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் ஆங்காங்கு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கும் இனவாத கும்பல்கள் தொடர்பிலான அவதானத்தின் பின்னணியில் கிழக்கிலிருந்தும் மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்தும் பயணிக்கும் வாகனங்களின் பிரயாணப் பாதைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல ஊர்களுக்கும் இது குறித்த செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை திகன, தெல்தெனிய, கெங்கல்ல பகுதிகள் ஊடான பிரயாணங்களை பெரும்பாலனவர்கள் தவிர்த்து வருகின்றனர்.


இது குறித்து பொது மக்கள் மேலும் அவதானத்துடன் செயற்படுமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment