கலவர பூமியை பார்வையிடச் செல்கிறார் ரணில்! - sonakar.com

Post Top Ad

Saturday, 10 March 2018

கலவர பூமியை பார்வையிடச் செல்கிறார் ரணில்!


File photo

கண்டியில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்றுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

திகன நகருக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்வதோடு கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க சட்ட,ஒழுங்கு அமைச்சராகப் பதவியேற்றதும் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தமையும் பொலிஸ் அமைச்சராக இருந்தும் அதனைக் கட்டுப்படுத்த முடியாது போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Post a Comment