வன்முறைகளின் சூத்திரதாரிகள் யார் என்பது 'தெளிவான' விடயம்: ஷெஹான் - sonakar.com

Post Top Ad

Saturday, 10 March 2018

வன்முறைகளின் சூத்திரதாரிகள் யார் என்பது 'தெளிவான' விடயம்: ஷெஹான்அம்பாறையிலிருந்து ஆரம்பித்து திகன வரை பரவிய வன்முறைகளின் சூத்திரதாரிகள் யார் என்பது மிகவும் தெளிவான விடயம் என தெரிவிக்கிறார் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேனசிங்க.

2015 'தேசிய' தேர்தலுக்கு முன்பாக அளுத்கமயில் ஒரு கலவரம் இடம்பெற்றது, அதனைத் தொடர்ந்து இப்போதும் தேசிய அளவிலான ஒரு தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு ஒரு கலவரம் நடந்துள்ளது.


இந்நிலையில், அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரிகளான அதே 'இரு அமைச்சர்கள்' இப்போது அரசின் பக்கம் இருக்கிறார்கள். எனவே, இது யாருடைய வேலையென்பது மிகத் தெளிவான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment