அம்பாறை வன்முறை சம்பவம்: நால்வருக்கு விளக்கமறியல்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

அம்பாறை வன்முறை சம்பவம்: நால்வருக்கு விளக்கமறியல்!


அம்பாறையில் இடம்பெற்ற முஸ்லிம் விரோத வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் நால்வருக்கு எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் நபரின் உணவகத்தில் வழங்கப்பட்ட கொத்து ரொட்டியில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டிருந்ததாகக் கூறி உணவகத்தைத் தாக்கியதோடு அருகிலிருந்த பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் வாகனங்களும் எரியூட்டப்பட்டிருந்தது.


இந்நிலையில் கடந்த தவணையில் சரணடைந்து கைதான நபர்களை பிணையில் விடுவித்திருந்த நீதிமன்றம் இம்முறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் சிலருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளதோடு அடையாள அணி வகுப்பு நடாத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-A.Aziz

No comments:

Post a Comment