கண்டி வன்முறை: 423 முறைப்பாடுகள் பொலிசில் பதிவு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

கண்டி வன்முறை: 423 முறைப்பாடுகள் பொலிசில் பதிவு!
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 423 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்நிலையில் அவசரகால சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட மேலதிக தகவல்களின் அடிப்படையில் குண்டசாலையில் அமையப் பெற்றுள்ள பிரதான சந்தேக நபரின் அலுவலகத்திலிருந்து இனக் குரோதத்தை உருவாக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பிரச்சார அம்சங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கடந்த நான்காம் திகதி முதல் 12ம் திகதி வரையான காலப்பகுதியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்திய 445 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 300க்கு அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதுடன் ஒரு இளைஞர் வபாத்தாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment