எனக்கும் பிரதமராகும் தகுதியுண்டு: ஜோன் - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 March 2018

எனக்கும் பிரதமராகும் தகுதியுண்டு: ஜோன்நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற அடிப்படையில் தனக்கும் இலங்கையின் பிரதமராகும் தகுதியிருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன் அமரதுங்க.

ரணிலுக்கு அடுத்தபடியாக தானே நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாக சுட்டிக்காட்டும் ஜோன் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருபவராவார். எனினும், தான் பதவிகளுக்குப் பின்னால் போகப் போவதில்லையெனவும் அது தனக்குத் தேவையுமில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் எனும் அழுத்தமான குரல் எழுந்த நிலையில் அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவன்முறை இடம்பெற்று அவ்விடயம் தற்சமயம் மறக்கடிக்கப்பட்டிருக்கின்றமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment