கண்டியில் நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு! - sonakar.com

Post Top Ad

Monday, 5 March 2018

கண்டியில் நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!


திகன வன்முறை பரவியுள்ள நிலையில் கண்டியில் ஏலவே ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்திய அரசாங்கம் நாளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் கட்டாய விடுமுறையளித்துள்ளது.

நேற்றிரவு முதல் விஸ்வரூபம் எடுத்துள்ள வன்முறை சம்பவங்கள் பல்வேறு இடங்களுக்குப் பரவியுள்ள நிலையில் இவ்வறிவித்தல் வெளியாகியுள்ளது.


ரணில் விக்கிரமசிங்க சட்ட,ஒழுங்கு அமைச்சராகப் பதவியேற்ற பின் இனவிரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் தற்சமயம் திகன மற்றும் சூழவுள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனினும், பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் முஸ்லிம்களை அடக்கி விரட்டி வருவதாக பிரதேச மக்கள் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment