ஆள் மாறிப் பயனில்லை 'கொள்கை' மாற்றம் வேண்டும்: சுசில் - sonakar.com

Post Top Ad

Friday, 2 March 2018

ஆள் மாறிப் பயனில்லை 'கொள்கை' மாற்றம் வேண்டும்: சுசில்


உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வியடைந்த அரசாங்கம் பதவிகளில் ஆட்களை மாற்றிப் பயனில்லை மாறாக அரசின் கொள்கைகளே மாற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் சுசில் பிரேமஜயந்த.

2015ல் வெற்றியையும் 2018ல் தோல்வியையும் அளித்த மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்ளத் தவறின் அரசாங்கம் மீண்டும் படுதோல்வியை சந்திக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் கொள்கை மாற்றங்கள் உடனடியாக அவசியப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


தேர்தலையடுத்து அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சுப் பொறுப்புகளில் ஆள் மாற்றம் இடம்பெற்றிருந்ததோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தரப்பிலான மாற்றம் அடுத்த வாரமளவில் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment