பெரமுன தரப்பின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்றைக் கலைக்க நடவடிக்கையெடுத்தால் அதற்கு சமகி ஜன பல வேகய ஆதரவளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணிலுடன் கை கோர்த்து இயங்குவதற்கு சமகி ஜன பல வேகயவின் பலர் ஆயத்தமாகியுள்ள நிலையில், கட்சி ரீதியாக இவ்விவகாரத்தில் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்க 'தலைவர்களும்' தயார் என சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றைக் கலைப்பதற்கான அதிகாரம் இருக்கிறதா என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதாகவும் சமகி ஜன பல வேகய தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment