முன்னைய ஆட்சியாளர்கள் குப்பையில் வீசியிருந்த இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமே ஆகக்குறைந்தது இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்கிறார் ஐ.தே.கட்சியின் வஜிர அபேவர்தன.
நாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டைப் பொறுப்பேற்க வேண்டிய கடமையிருந்த போதிலும் அதனை அவர் செய்யயத் தவறிவிட்டதாகவும் வஜிர சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் முன்னெடுப்பை நிறைவு செய்ய ரணிலை மேலும் 12 வருடங்களுக்கு ஜனாதிபதியாக்கி நன்றிக் கடன் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment