தங்கக் கடத்தல் குற்றச் சாட்டுக்குள்ளாகியுள்ள புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியை நாடாளுமன்றிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையொன்றை முன் வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சியின் போது அநுர டேனியல் இவ்வாறு நீக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்றுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதன் பின்னணியில் இந்நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனது உதவியாளர் தனக்குத் தெரியாமல் தங்கத்தை பதுக்கியுள்ளதாக அலி சப்ரி ரஹீம் விளக்கமளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment