லிட்ரோ விலை குறைப்பு; LAUGFS அடம் - sonakar.com

Post Top Ad

Wednesday 3 May 2023

லிட்ரோ விலை குறைப்பு; LAUGFS அடம்

 


லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்றிரவிலிருந்து 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், LAUGFS நிறுவனம் தமது விலையில் மாற்றமில்லையென தெரிவித்துள்ளது.


லிட்ரோ 12.5 கி.கி சிலிண்டரின் புதிய விலை ரூ. 3638 என அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை LAUGFS நிறுவனம் தொடர்ந்தும் பழைய விலையிலேயே விற்பனை செய்யப் போவதாகவும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்திருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.


இதேவேளை, எதிர்வரும் ஜுலை மாதம் மின் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும் என அமைச்சர் காஞ்சன விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment