முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவை, சமகி ஜன பல வேகய தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாசவே கொலை செய்ததாக ஜே.வி.பியின் லால் காந்த வெளியிட்டுள்ள கருத்தின் பின்னணியில் சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னாள் ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் இக்கருத்தை மறுத்துள்ளதோடு விஜய குமாரதுங்க கொலையை அரசியல் காரணங்களுக்காக ஜே.வி.பியே மேற்கொண்டதாகவும் அதனை விளக்குவதற்கு அக்காலத்திலேயே விஜய குமாரதுங்கவை அனுப்பியது ஏன்? என விளக்கத் துண்டுப் பிரசுரம் வெளியிட்டதாகவும் விளக்கமளித்துள்ளனர்.
அத்துடன், முன்னாள் ஜே.வி.பி தலைவர் சோமவன்ச நாடு திரும்பிய பின் நடாத்திய முதலாவது பொதுக் கூட்டத்தில் விஜய கொலைக்காக வருத்தம் வெளியிட்டமையையும் முன்னாள் முக்கியஸ்தர் நந்தன குணதிலக்க, லால் காந்தவுக்கு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment