இந்த வருடத்துக்குள் இ-பாஸ்போர்ட் - sonakar.com

Post Top Ad

Tuesday 23 May 2023

இந்த வருடத்துக்குள் இ-பாஸ்போர்ட்

 எதிர்வரும் மாதம் நாடளாவிய ரீதியில் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான நிழற்படம் மற்றும் கை-ரேகை சேகரிப்பதற்கான 50 மையங்கள் இயங்க ஆரம்பிக்கும் எனவும் இதனூடாக இலத்திரனியல் தகவல்கள் உள்ளடங்கிய கடவுச்சீட்டுக்களை துரிதமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது..


பிரதேச செயலகங்களிலேயே இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் இதனூடாக மூன்று தினங்களுக்குள் மக்களுக்கு வீடு தேடியே கடவுச்சீட்டு வந்தடையும் எனவும் கொழும்பு செல்லும் அவசியம் இல்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பிரதேச செயலகங்களில் இதற்கான பிரத்யேக கருமபீடங்கள் உருவாக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment