பொருளாதாரத்தை 'சீரழித்த' வழக்கு விசாரணைக்கு! - sonakar.com

Post Top Ad

Monday 8 May 2023

பொருளாதாரத்தை 'சீரழித்த' வழக்கு விசாரணைக்கு!

 நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்தமைக்குப் பொறுப்பானவர்களை அடையாளப்படுத்த வேண்டி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைக்கு தேதி குறித்துள்ளது உச்ச நீதிமன்றம்.


மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ச உட்பட்ட குழுவினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள இம்மனுவினை ஜுலை மாதம் 5ம் திகதி விசாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜபக்ச குடும்பத்தினரே நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததாகக் கருதிய மக்கள், போராட்டங்களில் ஈடுபட்டதன் ஊடாக ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய உட்பட அனைவரும் பதவி விலக நேர்ந்தமையும் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியே இராஜினாமாவை ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment