கடினமான தேர்தல்; போராடும் எர்துகான்! - sonakar.com

Post Top Ad

Monday 15 May 2023

கடினமான தேர்தல்; போராடும் எர்துகான்!

 துருக்கி அதிபர் எர்துகான் அதிகாரத்துக்கு வந்து இரு தசாப்தங்களாகும் நிலையில் மிகவும் கடினமான தேர்தலை எதிர்நோக்கியுள்ளார்.


தற்சமயம் வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கைகளின் அடிப்படையில் எர்துகான் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், 'தெளிவான' வெற்றியாளர் யார் என அறிவிக்கப்படாத நிலையில், இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


துருக்கியில் தனி நபர் அதிகாரம் அதிகரித்து, அடக்குமுறை உருவாகியுள்ளதாக பாரிய குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றமையும் 2016 இராணுவ புரட்சியை முறியடித்த எர்துகான், தனது ஆளுமையை அதிகரித்துக் கொள்ள போராடி வருகின்றமையும் எவ்வாறாயினும், எர்துகானின் ஏ.கே.பி கட்சியும் கூட்டணியும் பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கன.

No comments:

Post a Comment